சல்லிக்கட்டு


ஏலத்தில் எடுத்ததில்லை

ஏமாற்றத் தேவையில்லை

தோற்பதற்கும் வெல்வதற்கும்

'கூட்டிக்' கொடுக்கும் பழக்கமில்லை


ஆனாலும் எம்மண்ணில்

விளையாட உரிமையில்லை.

காரணம் ?

கொம்புகளின் நடுவே

கோடிகள் புரளாமல்

வீரமும் மானமும்

விரும்பி புணருவதால்.


தான் ஏமாறுவதை

தானே கொண்டாடும்

கூட்டமது உள்ளவரை

வீர விளையாட்டுக்குத்

தடைகோரும் தவளைகளை

வசை பாடி என்ன பயன் ?

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு