கீழத்தெரு ஐயனார்
சிவகங்கை மாவட்டம் எங்க ஊர் பட்டமங்கல நாட்டைச் சேர்ந்த பல கோவில் மாடுகளில் கீழத்தெரு ஐயனாரும் வடக்குத்தெரு இராவுத்தராயரும் சுற்று வட்டாரங்களில் பெயர் பெற்றவை. பல மஞ்சுவிரட்டுகளில் பிடிபடாதவை. நின்று விளையாடுபவை.
வயது மூப்பின் காரணாமாக ஐயனாரும் இராவுத்தராயரும் சென்ற வருடம் இயற்கை எய்த பட்டமங்கல நாடே சோகத்தில் மூழ்கினோம். அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த பட்டமங்கல நாட்டைச் சேர்ந்த ஊர்கள் மட்டுமல்லாது சுற்று வட்டார நாடுகளிலிருந்தும் மக்கள் திரண்டு வந்தனர். இறுதி மரியாதைக்கு வந்த மாலைகள் வேட்டிகள் துண்டுகள் எண்ணிலடங்கா . எனக்கு விபரம் தெரிந்து எங்கள் ஊரில் எந்த மனிதருக்கும் கூட இந்தளவுக்கு இறுதி மரியாதை நடந்தது கிடையாது.
கழிசடைகள் சொல்வதைப் போல காளைகள் வீட்டு விலங்கோ காட்டு விலங்கோ கிடையாது.
எங்களைப் பொறுத்தவரை மஞ்சரட்டு மாடுகள்
குழந்தைகளுக்குக் கூடப் பொறந்தவை, பெரியவர்களுக்குக் குலசாமியாய் இருப்பவை.
தன் நாட்டு மாடுகளின் வணிகத்தைப் பெருக்கும் வந்தேறி விலங்கு அமைப்புகள் வாதத்தை விட கொடுமை மஞ்சரட்டுக்கு தடை கோரும்
உள்நாட்டுப் பெருச்சாளிகள் மற்றும் சாதிசாயம் பூசும் அரைவேக்காட்டு வெங்காயங்கள்.
இவ்வாறு தடை கோரும் தவளைகளையும் தடை சரியே என்று சப்பைக்கட்டு கட்டுபவர்களையும் இறந்து போன எங்க ஐயனாரும் இராவுத்தராயரும் சும்மா விடாது. உள்நாட்டு காளைகள் வம்சத்தை விருத்தியடைய விடாத தடை கோருபவர்கள் வம்சமும் இந்த தலைமுறையோடு முடியட்டும்.
இறந்து போன ஒரு ஊர் மாட்டின் சாபம் மட்டுமல்ல.. இறந்து கொண்டிருக்கும் இறக்கப் போகும் தமிழ்நாட்டின் பல்லாயிரம் மஞ்சரட்டு மாடுகளின் சாபம்


Comments