விழுது



மணலை அள்ளி

ஆறுகளைக் கடத்தி

வனங்களை வெட்டி

தனங்களை வளர்த்து

கடவுளை வீசி

கடலையும் கரைச்சு

கணிணிக் கூச்சலில்

பறையை ஒழிச்சு

வாட்சப் வீடியோவில்

வள்ளி திருமணம் தொலைச்சு

வெளிநாடு பறக்க

வெள்ளாமை மறந்து

முகநூலைத் தேய்ச்சு

முளைப்பாரி உடைச்சி

கிராமக் கல்லறையில்

நகரத் தொட்டில்கட்டி

தன் வம்சம் பெருக்கிட

ஆலமரம் விழுதிறக்கி

நேத்திக்கடன் தீர்க்குது

மானிடப் பழுது

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு