தற்படம்



பாக்களோடு சேர்த்து என்

மேனியில் மொய்த்த

ஈக்களையும் நீங்கள்

எண்ணக்கூடும்


சங்கங்களும் மன்றங்களும் என்

சாதனைகளைப் பட்டியலிட்டு தன்

சாப்பாட்டுக்கு வழி காணக்கூடும்


கவியரங்கம் பட்டிமன்றமென்று

கட்டுத்தறிகள் என்னைப்

பிரித்தும் மேயக்கூடும்


விருதென்ற சாக்கில்

என்பெயரை ஆங்காங்கே

விற்பனையும் செய்யக்கூடும்.

நாட்காட்டித் தாள்கள்

இரண்டில் நாயகன் முகம்

தொங்கக் கூடும்


பலநூற்றாண்டுகள் பறந்தபின்னே

பதப்படுத்தி வைத்திருக்கலாமென

என்னுடல் மீது நீங்கள்

பாசமும் காட்டக்கூடும்.


முகநூலில் பதிவேற்றி

முன்னூறு லைக்குக்கு மேல்

வாங்கவும் கூடும்.


உடனடியாக எடுத்துக்

கொள்ளுங்கள்

என்னுடன் ஒரு

தற்படம் (செல்ஃபி)







Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு