காயத்ரி மந்திரம்
கத்தப்பட்டுக் கண்மாய
கம்பீரமா காவக் காத்து
எம்மாமனுக மது வாசனைய
மண்டைக்கு முழுதும் ஏத்தி
இடிச்சு வைக்கிற கோழிரசத்த
இமைக்காம பாத்திருக்கும்
எங்க
தொட்டியத்து கருப்பையாவுக்கும்
ராக்காயி ஆத்தாவுக்கும்
எப்படியப்பு விளங்கும்
உங்க காயத்ரி மந்திரம்?.
Comments