திருப்புகழ் சந்தம் (முத்தைத்தரு பத்தி ..வடிவம்)


சட்டக்கொடிக் கட்டி செயற்படு

திட்டத்தரு நட்டு வியத்தகு

பட்டக்கனி பெற்றுத் தரணியிற் சிறப்பாயே.


குட்டிச்சிலைத் தொட்டு ரசித்திட

முட்டிப்பெரு மக்கட் படைவர

கட்டுக்கதை யற்று அனைவரை இழுப்பாயே.


இச்சைப்படிக் குச்சுக் கிடைத்திட

வச்சுத்தரு மச்சுப் புதையலிற்

உச்சித்தொடு பச்சைக் கிளியென இருப்பாயே.


சுத்தத்தினைத் தத்து எடுத்திட

மெத்தப்பணிச் சொத்துக் கொடுத்திட

முத்தைத்தரு சிப்பி யெனயுனை நினைத்தோமே.


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு