பாரதி
நதிநீர் இணைக்க நயத்துடன் சொல்லி
விதிவழி சென்றுநீ விண்ணை யடைந்தாய்
கதியின்றி மூழ்கினோம்; காப்பாற்று பிள்ளைகளை
வாதியாய் மீண்டும்நீ வந்து.
தட்டேந்த வைப்பர் தனியேநீ வந்தால்;உன்
பாட்டுப் புரட்சிக்கும் பாயும் வழக்குபல.
கூட்டி வருவாய் குமாரசாமி மைந்தனை;பின்
வெட்டி களுக்கு-வை வேட்டு.
குமாரசாமி மைந்தன்- பெருந்தலைவர் கு.காமராசர்.
Comments