அப்துல் கலாம் ஐயா மறைவின் போது


முதன்முறை

ராமேஸ்வர மீனவருக்கு

இந்தியா துக்கம்

அனுசரிக்கிறது.


காலா காந்திக்குப்பின்

வடக்கு விரும்பி

வளைந்து நின்றது இந்த

கடலோரக் கவிதையிடம்

மட்டுமே.


உலகைக் காய்ச்சும்

பொறுப்பு இந்த

உப்பாற்றங்கரையில்

பிறந்தவருக்கு.


இங்கிலாந்தில்

தலையங்கம்

இராமேஸ்வரத் தெருக்களில்

செய்தித்தாள் போட்டவருக்கு.


கருப்பு களிம்புடன்

காக்கிசட்டை காலரைத்

தூக்கி விட்டு நடந்தோம்

கடற்கரைக்காரர் தந்த கம்பீரத்திலே.


இயந்திரங்களின் மேல்

இச்சை கொண்டோம்

இராமேஸ்வரக் காற்று

இமயத்தில் அடித்ததாலே.


கலாம் விரல்பட்ட

மரைகள்

இராமர் வருடிக்

கொடுத்த அணில்கள்.


இனி

இராமேஸ்வரம்

நாத்திகர்களுக்கும்

புண்ணியஸ்தலம்.



Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு