வாழ்க்கை



அருப்புக்கோட்டை

அம்பது பவுனுக்கு

எனைப் பெத்தவுகளும்


அமெரிக்கா

ஐடி பொழப்புக்கு

உனைப் பெத்தவுகளும்


வாக்கப்பட்டு வருசம்

அஞ்சு ஆகியும்

சேர்ந்தே வாழுது

பட்டமங்கல டவுன்பஸ்

இருக்கையில்

உன் பேரும்

என் பேரும்.


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு