டிஜிட்டல் இந்தியா



கத்தியின்றி ரத்தமின்றி

டிஜிட்டல் இந்தியா கண்டீரே

நஞ்சையின்றி புஞ்சையின்றி

வாய்க்கரிசிக் கொருவழி சொல்வீரே



மாற்றம் தருவோமுன்னு

சொல்லிவந்து மாறிவிட்டீரோ?

நாற்றங் கால பராமரிக்க

மாத்துப் பிக்சர் தருவீரோ ?



உலகம் சுத்தி வந்துபுட்டா

பழமும் கிடைக்குமா ?

உள்ளூரூ ஊரணிக்கும்

தண்ணி கிடைக்குமா ?


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு