காமராசர் - நேரிசை வெண்பா
சத்தமே இல்லாது சாதனைகள் செய்துபுகழ்
பித்தம் பிடிக்கா புனிதன்நீ - நித்தமும்
செய்தியில் வந்திட செய்கிறார் கூத்துக்கள்
அய்யய்யோ என்போம் அழுது.
பசியின்றிப் பிள்ளைகள் பாடம் படித்திட
யாசிக் கவும்நீத யாராகி - நேசித்து
தீட்டிய சத்துணவில் தீயவர்கள் கள்ளையும்
ஊட்டலாம்; நஞ்சே உலகு.
Comments