சாங்கி விமான நிலையம் - அறுசீர் விருத்தம்
போரிலே தோற்ற சோகம்
போக்கியே எழுந்து நின்றாய்.**
நேரிலே பார்க்கும் சொர்க்கம்
நேர்த்தியில் எதையும் மிஞ்சும்.
பாரிலே உன்னைப் போல
பாவையும் அழகு இல்லை.
தேரிலே கலசம், சிங்கைத்
தேவியின் சிரசே சாங்கி.
வாங்கிய விருது கொண்டு
வானையும் தொட்டு நிற்கும்
ஓங்கிய புகழைத் தொட்டும்
ஓய்வையும் தள்ளி வைக்கும்
பாங்குடன் செய்யும் சேவை
பாறையை உருக வைக்கும்
சாங்கியின் இளமை கண்டு
சாமியும் சபலம் கொள்ளும்.
(போர்க்கைதிகள் கொண்டு 1943 -1945 காலத்தில் சாங்கி விமானத்தளம் கட்டப்பட்டது )
Comments