காமராசர் - அறுசீர் விருத்தம்



உவமையாக சொல்லி வைக்க

        உமக்குநிகர் யார்தான் உள்ளார்?

அவதாரம் எடுத்து வந்த

        ஆண்வடிவ சரஸ்வ தித்தாய்.

தேவர்களும் போற்றி நிற்கும்

        தேன்தமிழைப் போல அன்னை

சிவகாமி கர்ப்ப பைதான்

         சிறந்ததுஇவ் வுலகில் என்பேன்.



பட்டியெங்கும் திறந்து வைத்த

        பள்ளிகள்உம் பெயரைச் சொல்லும்.

கட்டிவைத்த அணைகள் என்றும்

        கண்ணீரைத் துடைத்து நிற்கும்.

வெட்டியகண் மாய்கள் இன்றும்

        வெள்ளாமை நடத்திக் காட்டும்.

நட்டுவைத்த நேர்மை மட்டும்

         நாயகனைத் தேடி வாடும்.


Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு