காமராசர் - இன்னிசை வெண்பா



பத்து தலைமுறைக்கும் பக்குவமாய் சேர்த்திட்ட

சொத்தில் சுகம்பேணும் சொல்வேந்தர் மத்தியில்

பெத்தவளைச் சேர்க்காத, பெண்ணின்பம் எண்ணாத

உத்தமன்நீ நேர்மையின் ஊற்று.



ஏடாள எண்ணாது ஏழைகள் நெஞ்சாண்டு

வாடாது என்னுள்ளே வாழ்பவர் - நாடாளும்

வேதங்கள் சொல்லிய வேந்தர் பிறந்தசூலை

மாதம்தான் ஆண்டினிலே மாண்பு.




Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு