இளமை



நீளாத முத்தங்களால்

நீளும் பெருவிரைவு

தண்டவாளக் கல்லிடுக்கில்

தவளைகளும்


விட்டுவிட்டு எரியும்

விளக்குகளின் அறைகளில்

விடாது சுழலும்

புகை மண்டலத்தில்

விட்டில் பூச்சிகளும்


நிரம்பி வழிந்த

மதுவினால்

வழியில் ஏற்பட்ட

வெள்ளத்தில்

எறும்புகளும்


பூட்டாத மேனி

இரண்டின் கலவியை

பூட்டிய கதவு

நிலையிலிருந்து பார்க்கும்

பல்லிகளும்


எப்படிக்

க(ளி)ழித்திருக்கும்

தத்தம்

இளமையை ?




Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு