அகால மரணம்



வளைவில் முந்தியதால்

மரணமும் முந்தியதாம்.

ஏதோ பிந்திச் சென்றவர்களைப்

போல முந்திச் சொன்னார்கள்.


பாதை தடுமாறியதற்கு

போதையும் காரணமாம்

தெளிவான பொய்யை

தெரிந்தே சொன்னார்கள்


கைப்பேசியுடனான கள்ளத்தொடர்பும்

காரணமாகச் சொல்கிறார்கள்

மனதைக் கல்லாக

மாற்றிக்கொண்டு.


வேகமாகச் சென்றால்

சோகமாய்த்தான் முடியுமாம்

தத்துவங்களைச் சொல்லிவிட்டு

தள்ளி நடந்தனர்.


எதார்த்தமான பேச்சுக்கள்

உண்மைகளைச் சொல்வதில்லை.

உண்மைகளைச் சொல்லவேண்டியவை

எதார்த்தங்களாக இருப்பதில்லை.



விபத்திற்குக் காரணமான

எதிர்பாராத சாலைத் திருப்பத்தைப்

போல.



Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு