காமராசர் ஐயா பிறந்த நாள்


வெள்ளை ஆடையுடுத்தி

காட்டு மிராண்டிகள்

உலவிய உலவும் நாட்டில்

நீ மட்டும்தான்

வெள்ளை மனம் கொண்டு

தமிழ் மண்ணில் பிறந்த நிலா.


இலவசங்களை எறிந்து

சுயஇன்பம் அடைவோர்

நாட்டில் பலர் உண்டு.


பள்ளிகளை இலவசமாக்கி

கல்விக்கே தந்தையானாய்

அன்று.


தென்னாட்டு காந்தி

என்றழைப்பர் உன்னை.

உண்மையிலேயே அவர்தான்

வடநாட்டுக் காமராசர்.


குமாரசாமி வம்சமோ

உன்னோடு முடிந்தது.

உன்னால் மட்டும்தான்

ஐயா

தமிழ்வம்சம் இன்னும்

அழியாதுள்ளது.


உன் ஆட்சியில்

ஊரெங்கும் நாடெங்கும்

மகிழ்ச்சித் திருவிழா


உன் ஒவ்வொரு

பிறந்தநாள்தான்

எனக்குத் திருவிழா.


Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு