பொன்விழா



சாதித்த தலைவர்கள்

இன்னும் சாதித்தலைவர்களாக

மாற்றப்படவில்லை.


திசைப் பிரிவினை

ரயில்பாதையில் மட்டுமே.

வட்டப்பாதைக்கு அந்த

வாய்ப்பும் கொடுக்கவில்லை.


மெல்லச் சாகும்

வசதி சிறுபான்மைத்

தமிழுக்குத் தரப்படவில்லை.


பொன்விழாப் பயணம் தவிர

இலவசமாய் இதுவரை

எதுவுமே கிடைத்ததில்லை


நடிகர்களை நம்பி

நாடாளுமன்றம் இல்லை.

நாடாளுபவர்கள் நடிப்பதும்

இல்லை.


உருவாக்கியவரின் பெயரில்

இதுவரை ஒரு

தெருகூட

தோன்றவில்லை.


எப்படியோ கொண்டாடிவிட்டது

சிங்கையும் ஒரு

நேர்மையான பொன்விழா.


Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு