சௌந்தர்ய இதழினி பிறந்தநாள் வாழ்த்து


வேலுநாச்சி ஆவதற்கு
மைலோவும் ஹார்லிக்ஸும்
போதுமென்பாள் வேலுநாச்சி.
குளிக்க வைக்கும்
அப்பாவை அம்மாக மாற்றிடும்
மஞ்சள் கரத்தவள் வேலுநாச்சி.
டூத்பிரசும் டீஸ்பூனும்
மட்டும் கொண்டே
யாரையும் தரைசாய்க்கும்
வல்லமை கொண்டவள் வேலுநாச்சி.
கலர் யூனிபாமுக்கு மட்டும்
கவச குண்டலம் கண்டதைப்போல்
துள்ளி எழுந்திடுவாள் வேலுநாச்சி.


வரிகளில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வேலுநாச்சியாய் வாழ்ந்திட 
இனிய பிறந்தநாள் வாழ்த்து எங்க வீட்டு வேலுநாச்சி
சௌந்தர்ய இதழினி பாப்பாவுக்கு :-)


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு