ரஜினி


அம்மாவுக்கு ஒரு சாதாபுடவ எடுக்கவே தீவாவளி போனச எதிர்பார்த்து அப்பா மில் ஓனருகிட்ட நாக்குத் தள்ளி கிடக்க இந்த அம்மாவுக்கு மட்டும் எப்படி பத்தாயிரம் பட்டுப்புடவை வந்துச்சுன்னு நினைச்சுகிட்டே, கக்கூஸ்ல இருந்து கட்டுற புடவ வரைக்கும் அம்புட்டும் அரசாங்கக் காசுல வாங்கின இந்த அம்மா மறுபடியும் ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு அண்ணாமலை ரேஞ்சுக்கு சபதம் போட்டு ஊர்ல கர்ண வேல பாத்த ஐயா சைக்கிள்ல ஒரு பக்கம் கதிரறுவா கொடியும் ( அவுகதான் அப்பாவுக்கு போனசு வாங்கி தர்றவுக ) மறுபக்கம் தமாகா கொடியும் ( காங்கிரசு குடும்பமாம் ) நடுவுல தலைவர் கண்ணாடி போட்டு ஸ்டைலா இருக்க ரசிகர் மன்ற கொடியையும் கட்டிகிட்டி நா திரிய, அரசாங்க சைக்கிள்ல கட்சிக்கொடி கட்டுனா கவர்ன்மென்டு பென்சன் போயிடுமுடான்னு ஐயா என்ன துரத்த, சிக்காம நானும் பறக்க , அந்த அக்கப்போரு முடிஞ்சே இருவது வருசமாச்சு..
இப்பத்தான் தலைவரு போர்க்களத்துல சந்திப்போமுங்கிறாரு..
போர்..
போர்..
போரடிக்கலையா தலைவா ... ன்னு யோசிச்சிகிட்டு இருக்கான் ஒரு சாக்லெட் ப்ரவுன் தமிழன்.
எழுதிக்கொண்டிருக்கும் நாவலிலிருந்து.. ( பயபுள்ளக அரசியல் பதிவுன்னு நெனச்சுறக்கூடாது பாருங்க )


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு