கலரு


துரு நெறஞ்ச தகரக்கலருல
மளியைக்கடை வச்சிருந்த
ரஹீம் மாமாவுக்கு
சுண்டுனா செவக்குற கலரு.

மகளுக்கு தலதேய்க்க
எண்ணெ வாங்கவந்துச்சு
அரக்கு கலரு சீல கட்டி
வசந்தா அயித்த.

ஊதா டப்பாவா
பச்சை டப்பாவான்னு
கல்லாவுல இருந்தவரு
கேள்வி கேட்க

கருகருன்னு முடிவளர
ஊதாவே கொடுங்கன்னு
பாராசூட்ட வாங்கினவுககிட்ட

மகளுக்கு தேய்ச்ச கையால
உந்தலையிலயும் தடவிக்கனு
நரைச்ச முடி பாத்து
மாமாவும் சொல்லையில

கருப்பா கடந்து போன
காலத்த நெனச்சி
செவந்து போச்சு அந்த
சாக்குலட்டு நிறத்துக்காரி மொகம்.


Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு