எழுதுக



இந்த வருடத்தின் முதல் வாசிப்பு. இளம் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுடன் ஜெமோ கடிதங்கள் மூலம் நிகழ்த்திய ஆத்மார்த்தமான உரையாடல்களின் தொகுப்பு. வாசிப்பதில் தொடங்கி வழிபாடு வரை ஒவ்வொரு பதிலிலும் அவ்வளவு தீர்க்கம் அவ்வளவு ஞானச்செருக்கு.14 கடிதங்களின் வழி தன் அக்கறையால் அக்கறையின்மையை சுண்டிக் கொண்டே வரும் ஜெமோ ஒரு கட்டுரையில் வாழைப்பழத்துக்குள்ளே பலாக்காயை சொருகுகிறார் வழக்கம் போல. எழுதுவதின் சோம்பலை உளவியல் ரீதியாக அணுகும் இடம் சோம்பலின் தண்டவாளத்தில் ரயிலாக ஓடுகிறது. பதில்களில் உள்ள ஆழ்ந்த புலமையையும் உண்மையான அக்கறையையும் கருத்தில் கொண்டு சில கேள்விகளில் உள்ள அடிமைத்தனத்தை பொறுத்துக் கொள்ளலாம். நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல் "எழுதுக" 

Comments

Popular Posts