கோபல்லகிராமம்
ஒரு கொலையில் ஆரம்பித்து இன்னொரு கொலையில் கிட்டத்தட்ட முடியும் கதை. இரு கொலைகளுக்கு மத்தியில் இந்த நாவல் நகர்ந்தாலும் எந்த பரபரப்பும் இன்றி கிழித்த கோட்டில் செல்லும் நீர் போல சுவாரசியத்துடன் நகரும் கதையாடல். ஓர் இனக்குழு ஒரு சில காரணங்களுக்காக சொந்த மண்ணில் இருந்து இடம் பெயறுகிறது. நடுவில் சில துயரங்கள் நம்பிக்கைகள் கதையை நகர்த்துகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு பிறகு புலம்பெயர்ந்ததன் எந்த சுவடும் இன்றி வாழும் இடத்தின் இயல்போடு பின்னிப்பிணைந்த வாழ்வியலே நாவலின் அடிநாதம். கதையில் நாயகன் இல்லை. நாயகியில்லை. அதிரடிகள் இல்லை ஆரவாரம் இல்லை. அதிக விவரணைகளோடு உள்ள கோட்டையார் வீடு கூட புலம்பெயர்ந்த வரலாற்றைச் சொல்லும் காரணியாகவும் நிகழ்கால இருப்பியலை சொல்லும் சாட்சியாக மட்டுமே நாவலில் உள்ளது. மற்றபடி உணர்வதற்கு இலகுவாக பக்கங்கள் அனைத்திலும் நிறைந்து இருக்கிறது கோபல்ல கிராமம்
பதிப்பகம் :அன்னம்
Comments