இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்
நிலையுள்ள அல்லது நிலையற்ற எந்த ஒரு பொருளைக் கொண்டும் ஒப்புமை கூற இயலாத ஒருவர் இளையராஜா. இளையராஜா என்பது ஓர் உணர்வு. கோபத்தை, காதலை, காமத்தை இன்னும் பல உணர்வுகளை எப்படி உணர மட்டும் முடியுமோ அப்படி இளையராஜாவை உணர மட்டுமே முடியும். உடலில் உள்ள ஒவ்வொரு மயிர்க்கால்களும் அவரால் ஆட்கொள்ளப்பட்டு தன்னை அவர் விரல்களின் நுனிச்சதையில் முழுமையாக ஒப்படைத்து கொள்ளும். குறிப்பு பாதத்தில் அல்ல. எப்படிக் கவிஞர் பிரான்சிஸ் கிருபாவைப் படிக்கும் போது நம்மைக் கிருபாவாகவே உணர்கிறோமோ எப்படி திரையில் ரஜினியின் அவமானங்களையும் வெற்றிகளையும் நமக்கானதாகவே உணர்கிறோமோ அப்படி ராஜாவைக் கேட்கும் போது, ராஜாவை உணரும் போது நம்மை ராஜாவாகவே உணர்ந்து எவர் பாதத்திலும் பணிய மனம் மறுக்கும். அதுவே ராஜ தருணம்.அதுவே குழந்தைச் செருக்கு. அப்படி உணர்தலின் வழியே அடையக்கூடிய ஒருவரை எழுத்தாளர் கி.ரா அவர்களின் அறிவுறுத்தலின்படி ரமேஷ் - பிரேம் கண்ட நேர்காணலின் விளைவே இந்தத் தொகுப்பு. இந்தத் தொகுப்பு நான்கு பகுத...
Comments