2025
2025 புதிதாய் என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என வளமையை விடக் கூடுதல் துள்ளலுடன் தொடங்கிய ஆண்டு. ஆனால் ஏன்
செய்ய வேண்டும் எதற்கு செய்ய வேண்டும் என்ற ஒரு தெளிவுக்கு நகர்த்திய ஆண்டு. பிரான்சிஸ் அண்ணனின் "அவனை அவனே கைவிட்ட
பின்பு நிகழ்ந்தது ஒரு அற்புதம்" இந்தக் கவிதை வரி என்னுடைய கபடி மைதானத்தில்
ஒரு தொடுகோடாய் நீண்டு கொண்டிருக்கிறது. அந்தக்
கோட்டைத் தொடுவதும் அந்தப் பக்கம் செல்வதும் பின் இந்தப் பக்கம் வருவதும் என எதிரே
யாருமே இல்லாத ஒரு விளையாட்டு ஆடிக் கொண்டிருக்கிறேன். தனிமை பிடிபட்டிருககிறது. எல்லா உணர்வுகளிலிருந்து விடுபடல்
தேவைப்பட்டது. ஆனாலும் ஏதோ
ஒரு பசை மைதானத்துக்கு வெளியே செல்ல தடுக்கிறது.
அலுவலக உணவு மேசைகளில்
தம்பியாக இருந்த குறும்புத்தனம் இந்த ஆண்டு அண்ணனாய் பொறுப்பேற்க வைத்தது. புதிதாய் வந்த தம்பிகள் நிறைய
சிந்திக்கிறார்கள். பத்து வருடத்திற்கு பிறகான வாழ்க்கை நிதிக்கு இன்றே
திட்டமிடுகிறார்கள். இதெல்லாம் புதிதாக இருக்கிறது.
நண்பர்களோடு சேர்ந்து செய்த
சில இலக்கிய தொடக்கங்கள் நம்பிக்கை அளித்தன. அளித்துக் கொண்டிருக்கின்றன. உறவுகள்
நண்பர்கள் வரிசையில் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள புத்தக வாசிப்பு
பெருந்துணையாக இருந்தது. என் வாழ்க்கையே
என் செய்தி என்ற காந்தி வாசிப்பில் ஆக்கிரமித்துக் கொண்டார். விலக நினைத்தாலும் வீம்பாய் வந்து கைகளில் ஏறிக் கொள்கிறார்
அந்தப் பொக்கை வாய் குழந்தை.
மற்ற வருடங்களை போல
இல்லாமல் இந்த ஆண்டு புத்தகங்களைப் படித்து விட்டு குறிப்பு எழுதியது கொஞ்சம்
பெருமையாக இருந்தது.
1. எழுதுக - ஜெயமோகன் - கட்டுரை
2. கங்கு - முத்துராசக்குமார் - நாவல்
3. கோபல்ல கிராமம் -கி.ரா- நாவல்
4. கார்மலி - மித்ரா அழகுவேல் - சிறுகதை
5. இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும் - ரமேஷ் பிரேம் - கட்டுரை
6. இக்கிகய் - ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ் - கட்டுரை
7. கல்வியில் மலர்தல் - வினோபா பாவே
8.காந்தியம் ஓர் உரையாடல் - சித்ரா பாலசுப்பிரமணியன் -
நேர்காணல்
9. இருதயத்தை நோக்கி இரு உரைகள் - ஸீயாட்டில் சாப்ளின் -
கட்டுரை
10. சின்ன சின்ன ஞானங்கள் - நித்ய சைதன்ய யதி - கட்டுரை
11.ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு - ஜெயமோகன்- கட்டுரை
12. நீர் வழிப்படுஉம் - தேவி பாரதி - நாவல்
13. கவிதை அந்தரங்கம் - க.வை. பழனிசாமி
- கட்டுரை
14.கழி ஓதம் - ரம்யா அருண் ராயன் - சிறுகதை
15. நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு - தன்னறம் - கட்டுரை
16.நலமறிதல் - ஜெயமோகன் - கட்டுரை
17. குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு - அனுபவம் மிஸ்ரா - கட்டுரை
18. நவகாளி யாத்திரை - சாவி - கட்டுரை
19. மண்ணில் உப்பானவர்கள் - சித்ரா பாலசுப்ரமணியன் - கட்டுரை 20. விமர்சனகலை -
க.நா. சுப்ரமணியம் - கட்டுரை
21.என் ஆடை என்பது யாருடைய குருதி - சிவகுருநாதன் - கட்டுரை 22.எல்லா உயிரும்
பசி தீர்க்க- நம்மாழ்வார் -
கட்டுரை
22.மற்றும் குழுவினர் - யாழிசை மணிவண்ணன் - கவிதை
23. கதாநாயகி - ஜெயமோகன்- நாவல்
24. 11 நிமிடங்கள் பாவ்லோ கொய்லா - நாவல்
25. அன்புள்ள புல்புல் - சுனில்
கிருஷ்ணன் - கட்டுரை
26. உரையாடும் காந்தி - ஜெயமோகன் -
கட்டுரை
27. இன்றைய காந்திகள் - பாலசுப்ரமணியன்
முத்துசாமி - கட்டுரை
28.யானை டாக்டர் - ஜெயமோகன் - சிறுகதை
29. நான் இந்துவல்ல நீங்கள் - தொ. பரமசிவன்- கட்டுரை
30. செம்மாதுளை - எஸ் எஸ்
தென்னரசு - நாவல்
31. சுந்தர ராமசாமி கவிதைகள்
32. செயலறம் - சித்ரா பாலசுப்ரமணியன் - நேர்காணல் (வாசிப்பில்)
இப்பொழுதுள்ள லேசான மனத்தை
அப்படியே பத்திரமாக வருங்காலங்களிலும்
வைத்திருக்க வேண்டும். நிறைய பேச வேண்டும். முடிந்தவரை உண்மையா இருக்க வேண்டும். வரும் ஆண்டு எப்படி இருக்கும் தெரியவில்லை
எப்படி இருந்தாலும்
சந்தித்துக் கொள்ளும் உள்ளூர பக்குவத்தை வழங்கி இருக்கிறது இந்த ஆண்டு
நன்றி 2025 வருக 2026.
Comments