நான் இந்துவல்ல நீங்கள்

 


எங்கோ தொலைதூரத்தில் நடந்து கொண்டிருந்த வெறுப்பு அரசியல் இப்பொழுது நமது பக்கத்தில் நடக்கிறது மதம் என்கிற மாயக் குரங்கு இப்பொழுது நமது வீட்டின் ஓட்டில் குதித்து நிற்கிறது. இதுவரை சுப்ரமணியனும் தெய்வயானையும் திருமணம் செய்து கொண்டு மலையடிவாரத்தில் மகிழ்ந்து கொண்டிருந்தனர்.மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா அமைதியின் ஆழத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். இதோ மத வெறியால் மலை இரண்டாக அறுக்கப்படுகிறது. மக்களோடு சேர்த்து சிக்கந்தரும் முருகனும் மதுரை ஒத்தக்கடை உயர்நீதிமன்ற வாசலில் தவியாய் தவித்தபடி உள்ளனர். காலம் அவர்களுக்கு நல்லதையே அருளட்டும் .

நான் இந்துவல்ல நீங்கள்...ஆன்மிகத்திற்கு எதிரான புத்தகம் அல்ல. மாறாக இந்து என்ற சொல்லின் பின்னால் உள்ள சமுக அரசியல் குறித்தான தொ.பரமசிவம் அவர்களின் நேர்காணலின் தொகுப்பு .

இந்து என்ற சொல் ஆராய்ச்சியில் ஆரம்பிக்கிறார் பரமசிவம் ஐயா. இதுவரை கட்டமைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கள், வழிபாட்டு முறைகள் , சாதிய படிகள் குறித்த கேள்வி எழுப்புகிறது தொ.பவின் பதில்

தொ.ப அவர்களின் ஆராய்ச்சியின், உழைப்பின் மீது கொண்ட நம்பிக்கை இதுவரை கொண்டிருந்த நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்கிறது.

ஆன்மீகத்தில் ஆர்வமுள்ளவர்கள் படிக்க வேண்டிய நூல்


Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு