கவிதை
நெரிசலற்ற பாதையில்
சீரான ஒரே வரிசையில்
ஊர்கிறது பயணம்
காதல் முன்வண்டியில்
செல்கிறது.
காமம் பின்வண்டியில்
துரத்துகிறது.
காமத்திற்கும் காதலுக்கும்
இடையில் பயணிப்பது
அவ்வளவு சுகமில்லை.
ஆனால் சுவாரசியமானது.
சாலையின் இருமருங்கிலும்
அவ்வளவு வேகமாக ஓடுகின்றன
திணைகள்
யுகங்கள்
உணர்வுகள் .
யார் நட்டது தெரியவில்லை
உணர்வுகள் மட்டும்
பின்னோக்கிச் செல்கின்றன.
Comments