கவிதை

 

மலை வனங்களுக்குள்

மறைந்திருக்கும் ஒளியைக்

கண்டடைய பணித்திருக்கிறது காலம்.

ஒளி நிறைந்திருக்கிறது

இருந்தும் நீங்கியிருக்கிறது .

முகடு நோக்கி மெதுவாய்

நகரும் பனிமேகத்தின்

அகங்காரப் பிதற்றல் உனக்கு.

எதற்கும் அசையாத

மலையின் வெற்றுத்திமிர் எனக்கு.

சதை தின்னும் நம்

விலங்குகளுக்கு தெரிவதில்லை

இவையெதுவும்.

 

Comments

Popular posts from this blog

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

கன்னி

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு