இக்கிகய்
வாழ்வை நோக்கிய சலிப்புகள் நாற்பதின் தொடக்கத்திலே வரத்தொடங்கிவிட்டன. சின்ன சின்ன சறுக்கல்களைக் கூட மரணத்திற்கான எஸ்கலேட்டர்களாக மாற்றி மனம் அருளிக் கொண்டிருக்கிறது. போதையின் தோள்களில் பால்குடி மறந்த உடனேயே பிள்ளைகள் ஏறத்தொடங்கிவிட்டனர். உள்ளும் புறமும் இப்படி இருக்க நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான ஜப்பானிய ரகசியம் என்ற குறிப்புடன் இருந்த “இக்கிகய்” யை ஒருவித நகையுணர்வுடனே ஆரம்பித்தேன். ஆனால் பக்கங்கள் செல்ல செல்ல புத்தகம் ஆக்கிரமிக்க தொடங்கியது. ஏதோ சுயமுன்னேற்ற தத்துவங்கள் உளவியல் உருட்டல்கள் மகா கணங்களின் பொன்மொழிகள் என்றெல்லாம் இருந்த எதிர்பார்ப்புகளை எங்கோ ஒரு தீவில் இருக்கின்ற மக்களின் நிம்மதியான வாழ்வியலை எந்த ஒரு புனைவுமின்றி சொல்லுகின்ற எழுத்து உடைத்தெறிகிறது. அறிவுரைகள் அதிகம் தான் இது போன்ற புத்தகங்களில் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது ?. அந்தத் தீவு மக்களின் ஆவி குறித்தான நம்பிக்கைகள் அக்கம் பக்கத்தினரோடனா கூட்டு வாழ்வு பக்கங்களை அலுப்புத்தட்டாது நகர்த்துகின்றன. அதே நேரத்தில் அந்தச் சூழலுக்கும் அந்த மனிதர்களுக்கும் உகந்திருக்கும் அந்த வாழ்வு இ...